தலைவர் 169 திரைப்படத்திற்கு நெல்சனுக்காக ரஜினியிடம் தூது சென்றுள்ளார் அனிருத்.
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ரஜினியின் 169-ஆவது திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமானார் நெல்சன். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. ரஜினியின் இந்த திரைப்படத்தை அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. சென்ற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதனால் ரஜினியின் திரைப்படத்தை அட்லீ அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வந்தது. இந்த நிலையில் நெல்சனுக்காக அனிருத் ரஜினியிடம் தூது சென்று பேசி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. தலைவர் 169 திரைப்படத்தின் கதை மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் பீஸ்ட படத்தில் நடந்த குளறுபடிகள் குறித்து ரஜினியிடம் கூறியுள்ளார் அனிருத். ஆகையால் ரஜினி தன்னால் ஒரு இளம் இயக்குனர் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என இத்திரைப்படத்தை நெல்சன்னே இயக்கட்டும் என முடிவு செய்திருக்கிறாராம். இந்தச் செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.