ரஜினியின் 170 ஆவது திரைப்படத்தை இளம் இயக்குனர் இயக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் படபிடிப்பானது சில நாட்களுக்கு முன்பாக தொடங்கியது.
இத்திரைப்படத்தை அடுத்து ரஜினியின் 170-வது திரைப்படத்தை இளம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.