நடிகை கிரண் ரஜினியின் பாபா படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். இதை தொடர்ந்து இவர் வில்லன், அன்பே சிவம் வின்னர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து நடிகை கிரண் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகியிருந்தார் . இதன்பின் ஆம்பள, சகுனி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை கிரண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரஜினியின் பாபா பட வாய்ப்பை தவறவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அதில் பாபா படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் தனக்கு தான் வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் அந்த நேரத்தில் ஜெமினி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால் பாபா படத்தில் நடிக்க முடியவில்லை என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் ரஜினியின் நடிப்பையும், நடனத்தையும் யாராலும் தொட முடியாது என்பதை இப்போதும் நான் சொல்வேன் என்றும் தெரிவித்துள்ளார் .