நடிகர்கள் கமல் மற்றும் ரஜினிகாந்த் இணைந்தால் ரசிகர் மன்றங்கள் வேண்டுமானால்உயரலாமே தவிர அரசியலில் வெற்றி பெற முடியாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு கிடங்கை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். ரஜினி-கமல் ரசிகர்கள் படம் பார்க்க தான் விருப்பப்படுவார்களே தவிர அரசியலில் ஆர்வம் கொள்ளமாட்டார்கள். மக்கள் விரும்பினால் தான் அது அரசியல் ஆக முடியும். ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றால் ரசிகர் மன்ற எண்ணிக்கையை வேண்டுமானால் அதிகப்படுத்திக் கொள்ளலாம். கமலைப் பொறுத்தவரை அரசியல் தெரியவில்லை. அரசியல் தெரியாமல் ஏதாவது பேசுகிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.