தமிழக மக்களுக்காக ஈகோவை விட்டு தந்து நானும் ரஜினியும் ஒன்றிணைய தயாராக உள்ளோம் என பரபரப்பு அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனை அடுத்து மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “நானும் ரஜினியும் மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டு தந்து ஒன்றிணைய தயாராக உள்ளோம். அதிமுகவின் நீட்சியாக இதை சொல்லவில்லை. எம்ஜிஆரின் நீட்சியாக எந்த நடிகரும் இருக்கலாம். எம்ஜிஆர் திமுகவின் திலகமும் இல்லை. அதிமுகவின் திலகமும் இல்லை. அவர் மக்கள் திலகம். எனது பரப்புரை பயணத்திற்கு அனுமதி கொடுத்தது ஏன்? பரப்புரைக்கு சென்றால் அதை தடுப்பது ஏன்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.