தமிழ் சினிமாவில் அழியாத கோலம் படம் அறிமுகமானவர் பிரதாப் போத்தன்(70). இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இந்தநிலையில் நேற்று சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடியில் குடியிருப்பில் இறந்துவிட்டார். கடந்த சில நாட்களாகவே பிரதாப் போத்தன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதாப் போத்தன் ரசிகர் ஒருவர் ரஜினியை தூக்கிய வீடியோவை ஷேர் செய்து ஃபீல் பண்ணுகிறார். அதில் “வாழ்க்கையில தொழில்ல மேலே போகணும் ரஜினி” என்று பிரதாப் போத்தன் சொல்வது கேட்டாலே கண்ணில் கண்ணீர் வருகிறது. அதற்குள் என்ன அவசரம் என்று போய்விட்டீர்கள் என ரசிகர்கள் உருக்கமாக கேள்வி எழுப்பினார்.
Rest in peace.#PrathapPothen pic.twitter.com/NfAUoVifFr
— Ramesh Murugesan (@rameshmgsn2) July 15, 2022