நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி, ரஜினியை விமர்சித்து கேலி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ரஜினி கட்சி தொடங்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ரஜினி அலை வீசிக் கொண்டிருக்கிறது. ரஜினிக்கு அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து சொல்லி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ரஜினி முதலில் கட்சியை பதிவு செய்கிறாரா என பார்ப்போம். அதற்குப் பிறகு நான் அவர் அரசியல் வருகை குறித்து கருத்து சொல்கிறேன்” என்று அதிரடியாக கூறியுள்ளார்.