Categories
அரசியல்

ரஜினியை யாரும் சீரியஸா எடுத்துக்க வேண்டாம்….? விமர்சனம் செய்யும் அரசியல் கட்சிகள்….!!!!!!!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் எனக் கூறுவதும் அதன்பின் அரசியலுக்கு வர மாட்டேன் எனக் கூறுவதும் தமிழக மக்களுக்கு புளித்துப்போன செய்தியாக இருக்கிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு படு தீவிரமாக தயாராகிய ரஜினிகாந்த் அதே தீவிரத்துடன்  உடல் நலத்தை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இப்படி அரசியல் பற்றி நடிகர் பேசும்போதெல்லாம் அது பிரேக்கிங் செய்தியாக வருவதும் அதன்பின் ஒன்றும் இல்லாமல் போவதும் அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் தலைநகர் டெல்லி பயணத்தை முடித்த கையோடு அண்மையில் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேராக சென்றுள்ளார்.

ஆளுநர்  ரவியை சந்தித்த அவர் சுமார் 30 நிமிடங்கள் பேசியுள்ளார். அப்படி என்னதான் ஆளுநரிடம்  ரஜினிகாந்த் பேசினார்  என்பதை தெரிந்து கொள்ள ஆளுநர் மாளிகை மற்றும் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு முன்பு செய்தியாளர்கள் குவிந்துள்ளனர். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ஆளுநர் ரவியுடன் அரசியல் பற்றி பேசினேன் என கூறியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள் அரசியல் விமர்சகர்கள் அரசியலை விட்டு விலகுகிறேன் என கூறிய ரஜினிகாந்த் ஆளுநரிடம் அரசியல் பற்றி பேச ஆளுநர் மாளிகை தான் கிடைத்ததா எனவும் இது ஆளுநர் மாளிகையா இல்லை அரசியல் அலுவலகமா? என கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

இந்த விவகாரம் பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பேசும்போது ஆளுநரை சந்தித்து தமிழக மக்களுக்காக உழைக்க தயாராக இருப்பதாக ரஜினி கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ரஜினி கூறியிருக்க வேண்டும் அது தமிழக மக்களுக்கு உதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, அரசியலுக்கு வருகிறேன் உறுப்பினர்களை சேர்க்க சொல்லி விட்டேன் என்றார் ரஜினி அதன்பின் அரசியலுக்கு வரவில்லை எனக் கூறி சென்றுவிட்டார். ரஜினி சொல்வது அவருக்கும் புரியவில்லை. யாருக்கும் புரியவில்லை. அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என விமர்சனம் செய்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் பேசும்போது, அரசியலில் பேசியதாகவும் அந்த அரசியல் ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது எனவும் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக இருக்கிறது. ஆளுநர் மாளிகையில் அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல என கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். இதற்கு இடையே நடிகர் ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவி தரப்பட இருப்பதாக ஒரு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் அதிமுகவை இணைத்து அந்த தலைமை பொறுப்பையும் ரஜினியிடம் வழங்க பாஜக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

Categories

Tech |