Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரஜினியை வைத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படம்”…. வேற லெவல்ல வாழ்த்துக் கூறி விக்கி ட்விட்….!!!!

இயக்குனர் நெல்சனுக்கு விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது.

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்துடன் பீஸ்ட் திரைப்படத்தை ஒப்பீட்டு நெல்சனை இணையத்தில் கலாய்த்து பல மீம்களை போட்டு கலாய்த்தனர்.  இதையடுத்து நெல்சனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேட்டியில் லோகேஷ், “எல்லாரும் தோல்வியை சந்திக்கலாம்” என பேசியிருந்தார். இந்நிலையில் ரஜினி நெல்சன் இணையும் திரைப்படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இதற்கு விக்னேஷ் சிவன் நெல்சனுக்கு வாழ்த்துக் கூறும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, வா நண்பா வா…. தலைவரோட பெஸ்ட் பிலிமா இது இருக்கும். உன்னுடைய திறமையால் கலக்கு நண்பா என பதிவிட்டு இருக்கிறார்.

Categories

Tech |