Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி அரசியல் எண்ட்ரி… கட்சி பெயர், கொடி, சின்னம்… வெளியான பரபரப்பு தகவல்…!!!

ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் அனைத்து அம்சங்கள் பற்றி தமிழருவி மணியன் ஆலோசனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காட்சிக்கு தேவையான அனைத்து அம்சங்கள் குறித்து ரஜினியுடன் ஆலோசனை செய்வதாக தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் உள்ளிட்ட தகவல்களை ரஜினி அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக தான் கட்சி தலைவர் வேறு, முதல்வர் வேட்பாளர் வேறு என்று ரஜினி கூறியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |