தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவருக்கு உலக நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரின் ஸ்டைல் மூலம் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து நாளுக்கு நாள் இவருக்கு புகழும் ரசிகர்களும் அதிகரித்ததால் நடிகர் ரஜினிக்கு அரசியல் ஆசை ஏற்பட்டது. இதனை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக ‘நான் எப்போது வருவேன் எப்படி வருவேன் தெரியாது ஆனால் வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’ என்று அவ்வப்போது கூறிக்கொண்டு இருக்கிறார். ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. எனவே ரஜினிகாந்த் நடிக்கும் படங்களை ஓட வைக்கும் யுக்தியாகவே அரசியல் குறித்து பேசுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் கருணாநிதி, ஜெயலலிதா மறைந்ததால் இந்த சூழலை தனக்கு சாதகமாக ரஜினி முடிவு செய்தார். அதற்காக தமிழக அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனை தன்னால் மட்டுமே நிரப்ப முடியும் என்று ரஜினி கூறியதால் அரசியலில் களம் சூடு பிடித்தது.
இதற்கிடையில் ஆலோசனைக் கூட்டம், நேர்காணல் என அரங்கேறி பரபரப்பை கூட்டியதால் ரசிகர்கள் இன்ப கடலில் மூழ்கினர். இந்நிலையில் யாருமே எதிர்பாராத விதமாக அரசியல் ஆசையை கைவிடுவதாக ஒட்டுமொத்த வதந்திக்கும் ரஜினி முற்று புள்ளி வைத்தார். இதனால் விரத்தியும், அதிர்ச்சி அடைந்த ரஜினி ரசிகர்கள் தங்களுக்கு ஏதுவான கட்சிகளில் ஐக்கியமாகினர். அதன் பிறகு ரஜினி குறித்த எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. இதற்கிடையில் ரஜினி நடித்த படங்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி திடீரென பிரதமர் மோடியிடம் ஓரிரு நிமிடம் பேச வாய்ப்பு ரஜினிக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த சில தினங்களில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து ரஜினி பேசியது பெரிதும் பேசு பொருளாக மாறியது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினி, தமிழக ஆளுநருடன் அரசியல் பற்றி பேசுவதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
அதுமட்டுமில்லாமல் தமிழக நலனுக்காக எதையும் இழக்க தயாராக இருப்பதாக ஆளுநர் கூறியதையும் ரஜினி போட்டு உடைத்தார். ரஜினி இந்த பேட்டி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்ததாக வேண்டும் என்பதற்கு இணங்க ரஜினி குறித்த முக்கிய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போது ரஜினி பிரச்சார ஆயுதமாக பயன்படுத்திக் கொள்வதற்கு பாஜக பலே திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது கேரளா போன்ற ஏதாவது ஒரு மாநிலத்தில் ரஜினி ஆளுநராக நியமித்து விட்டால் ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவு பாஜக பக்கம் திரும்பி விடும் என்பதோடு தமிழக மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடிக்க முடியும் என்று பாஜக மேல்மட்ட தலைவர்கள் கணக்கு போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.