தமிழகத்தில் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என ரஜினி சொல்லவில்லை என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் 20 வருடமாக அரசியலுக்கு வருவதாக கூறி கொண்டிருந்த ரஜினி தான் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். ஆனால் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தான் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று அறிவித்தார்.
அதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் தான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என ரஜினி அறிவிக்கவில்லை என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். காலச் சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில், தற்போது அவர் கட்சி தொடங்குவதை தவித்திருக்கிறார். அவர் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட வில்லை என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.