நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் கமிட்டாகியிருந்த பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகியுள்ளார்.
ஜெயம் ரவியை வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இதில் திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.
ஆனால் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தவுடன் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகியுள்ளார். இந்த பொன்னியின் செல்வன் படத்தினை ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.