Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ரஜினி கொடுத்த “அந்தப் பொருள்”… அப்படியே வைத்திருக்கும் தனுஷ்… ரசிகர்கள் மகிழ்ச்சி…!!!

ரஜினிகாந்த் கொடுத்த கிப்டை இன்றளவும் அப்படியே வைத்திருக்கும் தனுஷ்.

நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் 2002ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரஜனிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும் மகளின் ஆசைக்கு சம்மதித்தார். திருமணத்திற்குப் பிறகு தனுஷின் மேல் ரஜினி மிகுந்த அன்பு வைத்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். ரஜினி அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதுவரையில் இவர்கள் சேர்வதற்கான எந்த தகவலும் வராமல், இருவரும் அவரவர்களின் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தனுஷ் சிவனின் தீவிர பக்தர் என்பதால் ரஜினி இமயமலைக்கு சென்றபோது தனுஷுக்காக ருத்ராட்ச மாலை ஒன்று வாங்கி வந்து கொடுத்தார். அதை தனுஷ் அணிந்தவாறு பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். பிரிவுக்குப் பின்னர் அந்த புகைப்படங்கள் வெளிவரவில்லை. இந்நிலையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நேற்று கலந்து கொண்டார் தனுஷ். அப்போது அவர் ருத்ராட்ச மாலையை அணிந்து இருந்ததை பார்த்த ரசிகர்கள் கூடிய விரைவில் தனுஷ் நல்ல செய்தி சொல்வார் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |