தருண் குமார் அபர்ணிதி, அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தேன். இந்த படத்தை கணேஷ் தயாரித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 19-ஆம் தேதி நேரடியாக சோனி லிவ் OTT தளத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் தருண், தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கை என்னவென்றால், ரஜினிகாந்த் சார் தயவு செய்து என் படத்தை பாருங்கள் நாங்கள் தேன் படத்தை உங்களிடம் காட்ட முயற்சித்தோம். தேன் படம் தற்போது சோனி லிவ் OTT தளத்தில் வெளியாகி உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.