நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தர்பார். இந்தப் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ரஜினிகாந்துக்கு நடிகை நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது 168 வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோ நடிக்கின்றனர். இதேபோல் நகைச்சுவை நடிகர்கள் சூரி மற்றும் சதீஷும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் தலைவர் 168 படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ஸர்ஸ் அறிவித்தது.
இதனால் கொண்டாட தயாரான ரஜினி ரசிகர்கள் #Thalaivar168 என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து அப்டேட் என்னவாக இருக்கும் என கேட்டு வந்தனர். அதன்படி சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த என அறிவிக்கப்பட்டுள்ளது. கறுப்பு பேக்கிரவுண்டில் சிவப்பு நிற எழுத்துக்களை கொண்டு வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.
இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ‘அண்ணாத்த’ என்ற கெத்தான டைடிலை வெளியிட்டதும் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்தப் படம் கிராபத்து குடும்ப செண்டிமென்டுடன் உருவாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்