Categories
சினிமா

ரஜினி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இணையும் முக்கிய நடிகர்?….. இணையத்தில் லீக்கான தகவல்….!!!!

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து திரைப் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார். அந்த அடிப்படையில் அண்ணாத்த திரைப்படத்தை அடுத்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படம் முடியும் முன்பே ரஜினியின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவ தொடங்கிவிட்டது. அதன்படி ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என்றும் அப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் என்றும் தகவல்கள் பரவியது. இதனிடையில் அப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்கவிருப்பதாகவும், அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Categories

Tech |