ரஜினியின் திரைப்படத்தை இயக்க முடியாமல் போனது பற்றி அண்மையில் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது.
இந்நிலையில் படம் சென்ற ஜூன் 3-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கின்றது. கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரீன்பிளே, ஆக்சன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜ் ஆதிக்கம் இருக்கின்றது. இத்திரைப்படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றது. லோகேஷ் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கியிருப்பதாக அவருக்கு பாசிட்டிவான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றது.
இந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. அத்திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இது இதுவரை நடக்காமல் இருக்கின்றது. இந்நிலையில் ரஜினியின் படத்தை இயக்க முடியாமல் போனது பற்றி லோகேஷ் அண்மையில் பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது, மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு ரஜினியிடம் கதையை கூறினேன். ரஜினிக்கு கதை மிகவும் பிடித்தது. இதையடுத்து படப்பிடிப்பு துவங்கலாம் என நினைத்த பொழுது கொரோனா பரவ தொடங்கியது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினிகாந்த்தும் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு சென்றார். இதனால்தான் ரஜினியின் படத்தை இயக்க முடியாமல் போனது என லோகேஷ் கூறியிருக்கிறார்.