தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்துள்ள இந்தி நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். “2008-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று மும்பை போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தனக்கு ஏதாவது ஆனால், மீடூ விவகாரத்தில் தான் குற்றம் சாட்டிய நடிகர் நானா படேகர், அவரின் வழக்கறிஞர் மற்றும் அவரது பாலிவுட் மாஃபியா நண்பர்கள்தான் அதற்கு காரணம். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.