Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினி பிறந்தநாள்”அரசியலிலும் வெற்றி கிடைக்கும்… சிரஞ்சீவி வாழ்த்து…!!

சிரஞ்சீவி அவர்கள் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களோடு  அரசியலிலும் வெற்றி பெற வேண்டும் என கூறியுள்ளார் .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார் .இதனையடுத்து  ரஜினிகாந்திற்கு திரை உலகில் உள்ள பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.அவ்வகையில் ரஜினிகாந்தினுடைய  நண்பரும் சமகாலத்தில் சூப்பர்ஸ்டார் போலவே தெலுங்கில்  உயர்ந்தவருமான  சிரஞ்சீவி அவர்கள் தன் நண்பர் ரஜினிக்கு  தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து குறிப்பில், “அன்பு நண்பர் ரஜினிகாந்த் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், இனிமையான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன் அரசியலிலும் இதேபோல் உன்னுடைய முயற்சி வெற்றி பெறும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் தனித்துவமான ஸ்டைல் மூலமாக பல மில்லியன் கணக்கான மக்கள் இதயங்களை பெற்றிருக்கிறீர்கள். அந்த மக்களுக்கு உங்களுடைய சேவையை தனித்துவமாக அமைப்பீர்கள் என நம்புகிறேன்” என்று அவர் கூறினார். சிரஞ்சீவியின் இந்த வாழ்த்து  ரஜினியின் அரசியல் பாதைக்கும் சேர்த்து அமைந்தது.

 

 

Categories

Tech |