Categories
மாநில செய்திகள்

ரஜினி மிரட்டுகிறாரா?…… பம்மி பதுங்கும் திமுக…. தீயாய் பரவும் செய்தி….!!!!

சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினி. இவர் தனது ஸ்டைல் நடிப்பின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இவருக்கு ஒரே நேரத்தில் புகழாரமும் ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்ததால் ரஜினிக்கு அரசியல் ஆசை ஏற்பட்டது. இதனை தனது ரசிகர்களுக்கு உணர்த்தக்கூடிய விதமாக வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவேன் என்று அவ்வப்போது தூண்டிவிட்டு கொண்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினி தனது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை தன்னால் மட்டுமே நிரப்ப முடியும் என்று கூறினார். மேலும் தமிழக அரசியலில் நிர்வாகம் சீர்கெட்டு இருக்கிறது. சிஸ்டம் சரி இல்லை மொத்தத்தையும் சரி செய்ய வேண்டும். அதற்கான நேரம் வரும், போர் வரும் போது களம் காணுவோம் என்று பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

ஆனால் ரஜினியின் அரசியல் வருகை குறித்து அறிவிப்பு செய்தித்தாள்களில் வெளியானதோடு சரியா அடுத்த கட்ட ரஜினி எடுத்துச் செல்லவில்லை. இதனையடுத்து 3 ஆண்டுகள் கழித்து தன்னுடைய உடல்நிலை காரணமாக அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுப்பதாக ரஜினிகாந்த் அறிவித்தார். இதனை அவரது ரசிகர்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் வசியமாடி பொழிந்து வெற்றியை தீர்த்துக் கொண்டனர். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி தமிழக ஆளுநர் சந்தித்து ரஜினிகாந்த் பேசினார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அதை ரஜினி உறுதி செய்தார். அதாவது தமிழக ஆளுநரை சந்தித்து விட்டு வெளியில் வந்த ரஜினி, தமிழ்நாட்டின் ஆன்மீக உணர்வு ஆளுறை ஈர்த்துள்ளது. “தமிழ்நாட்டின் நலனுக்காக என்ன செய்யவும் தயாராக உள்ளேன், எதை இழக்கவும் தயாராக உள்ளேன்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக ரஜினி தெரிவித்தார். ஏற்கனவே திமுகவிற்கு குடைச்சல் கொடுப்பதற்காக தமிழக அரசு அனுப்பி இருக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு கொள்கை முடிவெடுத்திருக்கும் சூழலில் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு குறித்து ஆளுநர் பேசிய திமுகவை வெறுப்பேற்றி வருகிறார். இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அரசுக்கு இடையே மோதல் போக்கு நிலவு வருகிறது. அப்படி இருக்கையில் தமிழ்நாட்டின் நலனுக்காக எதை இழக்கவும் தயாராக உள்ளேன் என்று ஆளுநர் கூறியதாக ரஜினி அளித்த பேட்டி நேரடியாக திமுகவை மிரட்டுவதற்காக என்றே பார்க்கப்படுகிறது. இது குறித்து கலந்து ஆலோசி முடிவு எடுக்கப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில் திமுக அரசு பெட்டி பாம்பாய் பம்மி பதுங்கி இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து திமுக மாநில நிர்வாகி ஒருவர் விசாரித்த போது, ஆளுநர் விவகாரத்தில் அவசரப்பட்டு வாயை விட வேண்டாம் என்று கட்சி கருதுகிறது. ரஜினியை எப்போது வேண்டுமானாலும் பழிதீர்த்து கொள்ளலாம். ஆனால் ஆளுநரை பகைத்துக் கொள்வது நல்லதல்ல. விரைவில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடி அரங்கேற வாய்ப்புள்ளது என்று அந்த நிர்வாகி ட்விஸ்ட் வைத்து முடித்துள்ளார்.

Categories

Tech |