Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி வரலைனாலும்…! இது கண்டிப்பாக நடக்கும் – குருமூர்த்தி நம்பிக்கை ..!!

அரசியல் கட்சி தொடங்காவிட்டாலும் தமிழ்நாடு அரசியலில் மாற்றத்தை ரஜினிகாந்த் ஏற்படுத்துவார் என, துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கட்சி தொடங்கவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள துக்ளக் இதழ் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, “ உடல்நல பின்னடைவு ஏற்ப்பட்ட பிறகு தான் எடுத்துள்ள முடிவு குறித்து ரஜினிகாந்த் என்னிடம் கூறினார். அது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இதன் மூலம் ரஜினி அரசியலில் நேரடியாக இல்லாமல் இருந்தாலும், தமிழ்நாடு மக்களுக்கு சேவை செய்வார்.

மூத்த பத்திரிக்கையாளர் ஆடிட்டர் குருமூர்த்தி ட்வீட்

அதுமட்டுமின்றி, ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறுதி வரிகளை படியுங்கள். அதில் எனது கருத்துப்படி, 1996ஆம் ஆண்டு ரஜினிகாந்த் ஏற்ப்படுத்திய அரசியல் மாற்றத்தை போன்று அரசியல் தாக்கத்தை தற்போது ஏற்ப்படுத்துவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |