Categories
அரசியல்

“ரஜினி, விஜயை வைத்து என்னை எதிர்க்கிறார்கள்…!!” சீமான் அதிரடி பேட்டி….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தேர்தல் பரப்புரையற்றினார். அதில் அவர் கூறியதாவது, “கூட்டணி எங்களது கோட்பாடு இல்லை. கொள்கை தான் எங்களுடைய கோட்பாடு. பாஜக,திமுக, அதிமுக காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் எங்களுக்கு கூட்டணி இல்லை. நட்புறவும் இல்லை .தனியாகத் தான் இருப்பேன் தோற்கடித்தால் பரவாயில்லை. பாஜகவை என் கட்சியுடன் ஒப்பிட வேண்டாம் அவர்கள் மதத்தை வைத்து ஆட்சி செய்கிறார்கள்.

அதிமுகவை எதிர்க்க வேண்டியது என்னுடைய கடமை. உத்திரப்பிரதேச முதல்வரை சாணியால் அடித்தால் கூட போதாது. இந்து இந்து என்று சொல்லி ஆட்சி செய்தால் நாடு நாசமாய் போகும். கர்நாடகாவில் நடைபெறும் ஹிஜாப் விவகாரம் குறித்துப் பேசுகிறவர்கள் சீக்கியர்களை மத அடையாளங்களின்றி பள்ளிக்கு வரச் சொல்லுங்கள் பார்ப்போம். என்னை எதிர்க்க விஜய் ரஜினியை பயன்படுத்துகிறார்கள். தற்போது தேர்தல் நியாயமானதாக நடைபெறுகிறதா நீங்களே சொல்லுங்கள்.? ” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |