1975-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதன்பின்னர் இவரின் நடிப்பின் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்து பல படங்களின் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான பைரவி, முள்ளும் மலரும், பில்லா, காளி, ஜானி, படிக்காதவன், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து நடித்து முன்னணி நடிகராக மாறினார்.
இந்த நெகிழ்ச்சியான தருனத்தை அவரது மகள் ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தின் மூலம் கொண்டாட்டமாக பகிர்ந்திருக்கிறார். மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்த 47 Years of Rajinism பேனரை வியப்பாக எளிமையான தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் பார்க்கும் புகைப்படங்களை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கங்களில் அவர் பதிவிட்டுள்ளார்.