ரஜினியின் 169-வது படம் குறித்து தகவல் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் தனுஷ் இதுப்பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். அது விமர்சனம் இழந்திருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரஜினிகாந்தின் 169வது படம் குறித்து அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் படத்தின் ப்ரோமோ நேற்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார் அனிருத் இசையமைக்கிறார்.
ரஜினி 169 குறித்து ரசிகர்கள் பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். ரஜினிகாந்தின் படம் குறித்து தகவல் வெளியானதும் முதலில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவார். இவர் ரஜினியின் மருமகனாக இருந்தாலும் தன்னை ரஜினி ரசிகராக பாவித்துக்கொள்வார். அண்மையில் தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிய போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் ரஜினியின் 169 படம் குறித்து தகவல் வெளியாகியும், தனுஷ் எந்த கருத்தையும் கூறவில்லை. இதனால் தனுஷ் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் கவலையுடன் இணையத்தை பதிவிட்டு வருகின்றன.