உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா தொற்று காரணமாக வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியீடு மிகவும் குறைந்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
அதன் பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா தொற்று காரணமாக வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியீடு 7 சதவீதம் குறைந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் வீட்டிலேயே தங்கி இருந்தது, போக்குவரத்து மற்றும் உற்பத்தி செயல்பாடுகள் குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் வளி மண்டலத்தில் கடந்த ஆண்டில் 3,640 கோடி டன்னாக இருந்த கார்பன் டை ஆக்சைடு கலப்பு, இந்த வருடம் 3,400 கோடி டன்னாக குறைந்துள்ளது. இது சுற்றுச் சூழலுக்கு மிகவும் நல்லது.