தந்தை மகனை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கணவன் மனைவியிடையே தகராறு, தகாத உறவு, இடப்பிரச்சனை, சொத்து பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் கொலை சம்பவங்கள் அரங்கேரி வருகிறது. குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பிரச்சனைக்கு தீர்வு காண்பதை தவிர்த்து கோபத்தில் சில கொடூர செயலை செய்கின்றனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல்விளை பகுதியில் சவுந்திரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இதில் நாகராஜன் என்பவர் கேரளாவில் கொத்தனாராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நாகராஜன் கடந்து சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது போதையில் வீட்டிற்கு வந்த நாகராஜனுக்கும், அவரது தந்தைக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சவுந்தரபாண்டியன் கோடரியால் தனது மகனின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த நாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் ரத்தம் படிந்த கோடாரியுடன் சவுந்தரபாண்டியன் இரணியல் காவல் நிலையத்திற்கு சென்று தனது மகனை கொலை செய்ததாக கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சவுந்திரபாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.