Categories
தேசிய செய்திகள்

ரத்ததட்டுகளுக்குப் பதில் பழச்சாறா?…. தனியார் மருத்துவமனை மீது பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

உத்திரபிரதேசத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரத்ததட்டுகளுக்குப் பதில் பழச்சாறை உடலில் செலுத்தியதாக தனியார் ஆஸ்பத்திரியின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்த மருத்துவமனைக் கட்டிடம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட இருக்கிறது. வருகிற 28ம் தேதிக்குள் அந்த தனியார் மருத்துவமனை இயங்கிவந்த கட்டிடத்தை, மருத்துவ நிர்வாகம் காலி செய்து விட வேண்டும் என பிரயாக்ராஜ் மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். அந்த மருத்துவமனைக் கட்டிடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆகவே அந்தக் கட்டிடம் விரைவில் தரைமட்டமாக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

பிரயாக் ராஜ் நகரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் பிரதீப் பாண்டே என்பவா் டெங்கு பாதிப்பால் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ரத்ததட்டுகளின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து, வெளியிலிருந்து ரத்த தட்டுகள் வாங்கப்பட்டு உடலில் ஏற்றப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் ரத்ததட்டுகளைச் செலுத்தாமல் சாத்துக்குடி பழச்சாறை நோயாளியின் உடலில் மருத்துவமனை நிா்வாகம் செலுத்தியதாகக் குற்றச்சாட்டு பெறப்பட்டது. அதன்பின் அந்நோயாளி வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவா் இறந்தார். இதற்கிடையில் நோயாளியின் உடலில் பழச்சாறு செலுத்தியதாக காணொலி சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதனைக் கவனத்தில் கொண்ட மாநில துணை முதல்வா் பிரஜேஷ் பாடக், சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவனைக்கு “சீல்” வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அதனை தொடர்ந்து மருத்துவமனை பூட்டப்பட்டது. அந்த மருத்துவமனை மீதான குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைவா் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணை முதல்வா் பாடக் உறுதியளித்துள்ளாா். நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரத்ததட்டுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

இச்சம்பவம் தொடர்பாக தனியாா் மருத்துவமனை உரிமையாளா் சௌரப் மிஸ்ரா கூறியதாவது, ரத்ததட்டுகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு நோயாளியின் உறவினா்களை வலியுறுத்தினோம். அவா்கள் எஸ்.ஆா்.என் மருத்துவமனையிலிருந்து 5 யூனிட் தட்டுகளை வாங்கி வந்தனா். அவற்றில் 3 யூனிட்டை நோயாளிக்குச் செலுத்திய போதே அவரது உடல்நிலை மேலும் மோசமடையத் துவங்கியது. இவ்விவகாரத்தில் ரத்ததட்டுகளை வழங்கிய எஸ்ஆா்என் மருத்துவமனை மீதே உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.

Categories

Tech |