Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நடிகர் அஜித் ரசிகர் மன்றம்”… 20 பேர் ரத்ததானம்…. மருத்துவர் தெரிவித்த தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் நடிகர் அஜித் ரசிகர் மன்ற சார்பில் 20 பேர் ரத்ததானம் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி அரசு மருத்துவமனையில் நடிகர் அஜித் மன்றம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமில் அஜித் ரசிகர் மன்ற தலைவர் சதீஷ் குமார் உட்பட 20 பேர் ரத்த தானம் வழங்கியுள்ளனர். முகாமிற்கு மருத்துவர் பெரியசாமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் அருள் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து அறந்தாங்கி டாக்டர் ராதாகிருஷ்ணன் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இதுக்குறித்து மருத்துவர் பெரியசாமி கூறும் போது கொரோனா தொற்று காலத்தில் ரத்தம் வழங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனால் விபத்துகளில் பாதிப்பட்டோர் மற்றும் பிரசவ காலத்தில் ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்தம் இல்லாமல் இறப்பு ஏற்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 6 மாத காலத்திற்கு ரத்ததானம் செய்ய கூடாது என்பதால் தற்போது ரத்த தானம் செய்தது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

 

Categories

Tech |