மும்பையில் உள்ள கொலாபா என்ற இடத்தில் கடந்த 1937-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நாவல் டாடா-சூனு தம்பதியினருக்கு மகனாக ரத்தன் டாட்டா பிறந்தார். இவர் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தன்னுடைய மேல் படிப்பை படித்தார். இவர் தன்னுடைய தாத்தா ஜாம்ஷெட்ஜி டாட்டாவால் இந்தியாவில் நிறுவப்பட்ட டாடா குழுமத்தை உலகெங்கிலும் எடுத்துச் சென்றார். இந்த டாடா நிறுவனம் பல்வேறு துறைகளில் தனக்கென தனி இடத்தை பெற்று விளங்குகிறது. இதனையடுத்து மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் மற்றும் தாஜ் டவர் போன்றவையும் டாடா குழுமத்துக்கு சொந்தமானது ஆகும்.
இந்நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் முகேஷ் அம்பானி இருக்கிறார். இவருடைய நெட்வொர்த் 96 பில்லியன் டாலர்ஸ் என கூறுகின்றனர். ஆனால் ரத்தன் டாடாவுக்கு அவருடைய டாடா குழுமத்தில் இருந்து 1 வருடத்திற்கு கிட்டத்தட்ட 100 மில்லியன் டாலர்ஸ் வருமானமாக கிடைக்கிறது. அது மட்டுமன்றி Facebook உரிமையாளர் மற்றும் பில்கேட்சை விடவும் ரத்தன் டாட்டா தான் மிகப்பெரிய பணக்காரர். அப்படிப் பார்த்தால் நம்பர் 1 பணக்காரர் பட்டியலில் ரத்தன் டாட்டா தானே முதலிடத்தில் இருக்க வேண்டும் என நினைப்பீர்கள்.
ஆனால் எந்த ஒரு பணக்காரர்கள் பட்டியலிலும் ரத்தன் டாடாவின் பெயரை பார்க்க முடியாது. இதற்கு காரணம் ரத்தன் டாட்டா தனக்கு வரும் வருமானத்தை தன்னுடைய பெயரில் வைத்துக்கொள்ள மாட்டார். இதுபற்றி ரத்தன் டாடாவிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது நான் மக்களுக்காக தான் இந்த நிறுவனங்களை நடத்தி வருகிறேன். எனவே என்னுடைய நிறுவனங்கள் மூலமாக வருகின்ற வருமானம் மக்களுக்கு தான் போய் சேரும் என கூறினார். மேலும் மும்பையில் இருக்கும் முகேஷ் அம்பானியின் வீடு 2 மில்லியன் டாலர்ஸ் ஆகும். ஆனால் ரத்தன் டாடா தன்னுடைய மொத்த சொத்து மதிப்பை 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வைத்திருக்க மாட்டார்.