Categories
சினிமா தமிழ் சினிமா

“ரத்தம் சிந்தி உழைக்கிறோம்” அத பாத்தா உடனே நீக்கிடுங்க…. சூர்யா படக்குழுவினரின் திடீர் எச்சரிக்கை அறிக்கை….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல், வணங்கான் உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்து வருகிறார். அதோடு விசுவாசம், சிறுத்தை, வீரம், விவேகம் மற்றும் அண்ணாத்த போன்ற பல படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் 3D-ல் உருவாக இருக்கும் நிலையில் 10 மொழிகளில் படத்தை வெளியிட படகுழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில் சூர்யா 42 பட குழுவினர் சார்பாக ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளது. அதில் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். சூர்யா 42 படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் பகிர்வதை நாங்கள் பார்த்தோம். ஒவ்வொரு வேலையும் ஒரு குழுவின் முழு வியர்வையையும் ரத்தத்தையும் உள்ளடக்கியது. இந்தப் படத்தை பிரம்மாண்டமான படமாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

எனவே படப்பிடிப்பு தளத்தின் போது எடுக்கப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து நீக்கினால் நன்றாக இருக்கும். அதோடு அந்த புகைப்படம் மற்றும் வீடியோவை யாரும் பகிர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் யாராவது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

`

Categories

Tech |