நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனியின் “ரத்தம்” திரைப்படத்தின் பாடல் பணிகள் தொடங்கியுள்ளது.
“தமிழ் படம்” என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர் டைரக்டர் அமுதன். இவர் தற்போது இயக்கும் புதிய திரைப்படம் “ரத்தம்”. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. படப்பிடிப்பு 40% முடிவடைந்திருக்கிறது.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அண்மையில் வெளியிட்டனர். இன்ஃபினிட்டி பிலிம் வென்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளனர்.இப்போது இந்தபடத்தின் பாடல் பணிகள் தொடங்கி இருக்கிறது . இச்செய்தியினை இயக்குனர் அமுதன் அவரின் இணைத்தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரும் பாடகர் தெருக்குரல் அறிவும் உரையாடுவது போல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.