Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரத்தம் வடிந்த நிலையில் கிடந்த சடலங்கள்…. கணவன்-மனைவிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

மர்ம நபர்கள் தம்பதியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் அம்பலபுளி பஜார் பகுதியில் ராஜகோபால்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நூற்பாலையில் மேலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு குருபாக்கியம்(68) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன்கள் இருவரும் திருமணமாகி கோயம்புத்தூரில் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக கணவன் மனைவி இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனி தனி அறைகளில் கணவன் மனைவி இரண்டு பேரும் வாயில் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்களின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியது. இந்நிலையில் மர்ம நபர்கள் தம்பதியினரை கொலை செய்து, வீட்டின் பல்வேறு இடங்களில் மிளகாய் பொடியை தூவி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகோபால் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், நூற்பாலைகள், மருத்துவ துணி உற்பத்தி நிறுவனங்கள் போன்றவற்றிற்கு பல கோடி ரூபாய் கடன் கொடுத்தது தெரியவந்தது. எனவே கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் யாரேனும் தம்பதியினரை கொலை செய்தார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |