சேலம் வழியாக இயக்கப்படும் 2 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை ரயில்வே சாம்பல்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட தியோபஹால்-பர்கார் இடையே இருவழிப் பாதைகளில் பொறியியல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் திருப்பூர், ஈரோடு, போத்தனூர், சேலம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள டாட்டா நகரில் இருந்து புறப்படும் டாட்டா நகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்(18189) நாளை மற்றும் வருகிற 29-ஆம் தேதி ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் எர்ணாகுளம்- டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரயில்(18190) நாளை மற்றும் வருகிற 28-ஆம் தேதி ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.