Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ரத்த உறைவு தடுப்பு மாத்திரை தட்டுப்பாட்டால் மக்கள் பாதிப்பு”….. ஆட்சியருக்கு கடிதம்…!!!!!

ரத்த உறைவு தடுப்பு மாத்திரை தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக பெரும்பாலும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தற்பொழுது ரத்த அழுத்தம் நோய்க்காக சிகிச்சைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. இருதய நோய், நரம்பு தளர்ச்சி நோயாளிகள் ரத்தம் உறையாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் க்ளோபிடோக்ரல் மாத்திரை சென்ற காலத்தில் பற்றாக்குறை இல்லாமல் இருந்த நிலையில் தற்பொழுது அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த மாத்திரை இல்லை.

வெளியே மருந்து கடையில் வாங்கிக் கொள்ளுமாறு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். இந்த மாத்திரையின் விலை ஏழு ரூபாய்க்கு மேல் இருப்பதால் ஏழை, எளிய மக்கள் வாங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். இதனால் அரசு மருத்துவமனைகளில் ரத்த உறைவு தடுப்பு மாத்திரை தட்டுப்பாடின்றி கிடைக்க உறுதிப்படுத்த வேண்டும் என மார்க்லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

Categories

Tech |