Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபர்…. நடந்தது என்ன….? பரபரப்பு சம்பவம்…!!!

நடுரோட்டில் வாலிபர் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து கோவளம் செல்லும் புதிய பேருந்து நிலைய சாலையில் இருக்கும் டாஸ்மாக் அருகே ரத்த காயங்களுடன் ஒரு வாலிபர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் பரமக்குடியில் வசிக்கும் வெங்கடேஷ்(27) என்பது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தபோது வெங்கடேஷ் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தாரா? அல்லது யாராவது அவரை தாக்கியதால் படுகாயம் அடைந்தாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |