Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரத்த காயங்களுடன் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடியான்குப்பம் ராம கவுண்டர் வட்டம் பகுதியில் ரத்த காயங்களுடன் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கூலி தொழிலாளியான கோவிந்தராஜ்(50) என்பது தெரியவந்தது. இந்நிலையில் கோவிந்தராஜுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சனையை காரணமாக முன்விரோதம் இருந்தது. எனவே முன்விரோதம் காரணமாக கோவிந்தராஜ் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |