தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வீட்டிற்கு முன்பு ரத்த காயங்களுடன் குப்புசாமி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குப்புசாமியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் இரவு நேரத்தில் நண்பர்களுடன் மது அருந்தும் பழக்கத்தை குப்புசாமி வழக்கமாக வைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் யாராவது அவரை கல்லால் அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.