உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட கொடையாளர்களுக்கு ஆட்சியர் கேடயம், சான்றிதல் வழங்கி பாராட்டியுள்ளார்.
தேனி மாவட்டம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உலக ரத்த கொடையாளர் தினம் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ரத்த தானம் வழங்கிய 100க்கு மேற்பட்ட கொடையாளர்களுக்கு ஆட்சியர் கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மாவட்டத்தில் மொத்தம் 43 ரத்தம் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அந்த முகாம்கள் மூலம் இது இதுவரை 1,150 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. மேலும் இதுவரை சுமார் 7,000 நோயாளிகள் அதன் மூலம் பயனடைந்துள்ளனர். தற்போது வரை ரத்த வங்கியில் அனைத்து இரத்த வகைகளும் போதுமான அளவில் இருப்பு உள்ளதாக கல்லூரியின் முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்சியில் ரத்த-வங்கி மருத்துவ அலுவலர் பிரியா, அனுமந்தன் மற்றும் மருத்துவர்கள் பலரும் பங்கேற்று உள்ளனர்.