கர்ப்பிணி பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சுந்தரபாண்டியபுரத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். தற்போது சுமார் 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இரத்த சோகையினால் சிரமப்பட்ட பேச்சியம்மாள் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்த பாலமுருகன் தனது மனைவி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு பேச்சியம்மாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.