ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் எளியமுறையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
பாலிவுட் பிரபலங்களான ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் பிரம்மாஸ்திரா என்ற படத்தில் நடிக்கும் போது இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். இவர்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இவர்கள் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்த வில்லை. அதன் பிறகு இவர்கள் இருவரும் காதலிப்பதை வெளிப்படுத்தினார்கள். இவர்களது திருமணம் ஆகாத 2020-ஆம் வருடம் நடக்கவிருந்த நிலையில் கொரோனா சூழல் காரணமாக தள்ளிப்போனது.
இந்நிலையில் ஏப்ரல் 14-ஆம் தேதியான நேற்று நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ரன்பீர் மற்றும் அலியா பட் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் பிரபலங்கள், ரசிகர்கள் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இவர்கள் இருவரும் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.