பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை தீபிகா படுகோனின் கணவர் ஆவார். இவரின் சிங்கின் ஆடை ஸ்டைலு தோற்றம் மிக வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பத்திரிகை ஒன்றுக்காக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்திருந்தார். அதில் தனது உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனால் ரன்வீர் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகினார். அதனைத் தொடர்ந்து இவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியது.
இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த ரன்வீர், எல்லோரும் முன்னிலையில் நிர்வாண படங்களுக்கு போஸ் கொடுப்பது எனக்கு ஒன்றும் கடினமல்ல. இந்த புகைப்படங்கள் எனது ஆன்மாவை பார்க்க முடியும். ஆயிரக்கணக்கான மக்கள் முன்னால் கூட நிர்வாணமாக இருக்க முடியும். ஆனால் சங்கடப்பட்டால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினார். இந்நிலையில் அன்வர் சிங் தனது நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து நடிகர் ரன்வீர் சிங் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.