Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரப்பர் தோட்டத்தில் கிடந்த பிணம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அருகே மணியன்குழி பகுதியில் கோபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும்,  2 மகள்களும் இருக்கின்றனர். இதில் ஒரு மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபாலன் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துவிட்டு கேரளாவுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கோபாலன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கோபாலன் கேரளாவிற்கு சென்று இருக்கலாம் என குடும்பத்தினர் நினைத்திருந்தனர்.

இவர்கள் வீட்டின் அருகே இருந்த ரப்பர் தோட்டத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஆணின் பிணம் கிடப்பதாக குலசேகரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிணத்தை பார்வையிட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது கோபாலன் என்பது தெரியவந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதன்பிறகு கோபாலன் உடல் பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |