Categories
தேசிய செய்திகள்

ரமணா பட பாணியில்… ” பிணத்துக்கு 2 நாள் சிகிச்சை பார்த்து”… பணம் பறித்த டாக்டர்… அதிர வைக்கும் சம்பவம்…!!!

சினிமா பட பாணியில் உயிரிழந்த பெண்ணிற்கு இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்து பணம் பிடுங்கிய மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மராட்டிய மாநிலம், சாங்கிலி மாவட்டம் பகுதியை சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் அங்கு உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணிற்கு மருத்துவர் யோகேஷ் என்பவர் சிகிச்சை அளித்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த எட்டாம் தேதி உயிரிழந்திருக்கிறார். ஆனால் இதனை அவரது குடும்பத்தினரிடம் இருந்து மறைந்த டாக்டர் யோகேஷ் இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்ததாக கூறி கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, பின்னர் பத்தாம் தேதி உயிரிழந்ததாக உடலை அவரது மகனிடம் ஒப்படைத்துள்ளார். உடலை பெற குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்தனர். பின்னர் இறந்த பெண்ணின் மகன் இறப்பு சான்றிதழ் பெற மாநகர அலுவலகத்திற்கு சென்று உள்ளார்.

அப்போது அந்த பெண் எட்டாம் தேதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைநது அந்த மருத்துவமனையில் உள்ள டாக்டரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே, சந்தேகமடைந்த மகன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் இரண்டு நாட்கள் பிணத்துக்கு சிகிச்சை அளித்து பணத்தை கறந்தது தெரியவந்தது. பின்னர் அந்த மருத்துவர் யோகேஷ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |