ரம்யா பாண்டியன் பகிர்ந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.
தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் . இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் நான்காவது இடத்தை பிடித்தார் . தற்போது படங்களில் நடித்து வருகின்றார்.
மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார் ரம்யா பாண்டியன். இந்த நிலையில் ரம்யா பாண்டியனின் போட்டோக்கள் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் தனது ஹை ஹீல்ஸ் செருப்புகளை தனியாக கழட்டிவிட்டு தரையில் சாய்ந்த படி எடுத்துள்ள போட்டோவை பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த பலரும் போதை தலைக்கேறி விட்டதா? சரக்கு அடித்து மட்டையானதால்தான் இப்படி செருப்பு கழன்று விழ தரையில் சாய்ந்து உட்கார்ந்து இருக்கின்றீர்களா? என அவரை கமெண்ட் செய்து வருகின்றார்கள்.