Categories
தேசிய செய்திகள்

ரயிலின் வேகத்தை குறைக்க வேண்டும்….!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

யானைகள் ரயிலில் மோதி பலியாகும் சம்பவங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு பொள்ளாச்சி,பாலக்காடு, கோவை வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் வேகத்தை 45 கிலோ மீட்டருக்கும் கீழாக குறைக்க வேண்டும் எனக் கூறினர். அதோடு ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் சூரிய மின்சக்தி வேலிகளை அமைப்பது வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆதலால் அந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறினர்.

மேலும் ரயில் ஓட்டுனர்களுக்கு யானைகள் வருவதை எளிதில் கண்டறியும் வகையில் ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகிலுள்ள புதர்கள் மற்றும் செடிகளை அகற்ற வேண்டும் எனவும் ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை தூக்கி வீச வேண்டாம் என பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர். யானைகள் வருவது குறித்து ரயில் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தினர். அதோடு இப்பணியின் முன்னோட்டம் குறித்து வரும் 18-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |