Categories
பல்சுவை

ரயில்-ல ஏன் SUDDEN BREAK இல்ல….? EMERGENCY BREAK எப்படி வேலை செய்யும்…. தெரியாத சில தகவல்கள் இதோ…!!

பல்வேறு பகுதிகளில் ரயிலில் அடிபட்டு விலங்குகள் உயிரிழப்பதை நாம் கேள்விபட்டிருப்போம். அண்மைக்காலங்களில் ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ரயிலை நிறுத்தாமல் வேகமாக செல்வதால் தான் விலங்குகள் அடிபட்டு இறக்கின்றன என சிலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. கார், பைக் போன்ற வாகனங்களில் சடன் பிரேக் பிடித்து விபத்தை தடுக்கலாம். ஆனால் ரயிலில் திடீரென ஏற்படும் விபத்தை ஏன் தடுக்க முடியவில்லை? ரயிலில் ஏன் உடனே நிற்பதில்லை? போன்ற எண்ணற்ற கேள்விகள் சிறு வயதிலிருந்தே நமக்குள் இருக்கும். அதன் உண்மையான காரணம் ரயிலின் என்ஜின் பகுதியில் எமர்ஜென்சி பிரேக் அமைந்துள்ளது.

விலங்குகளை பார்த்ததும் ரயில் எஞ்சின் ஓட்டுநர் உடனடியாக எமர்ஜென்சி பிரேக்கை பயன்படுத்துவார். ஆனால் ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி 500 அல்லது 600 மீட்டர் தொலைவுக்கு பிறகு ரயில் நிற்கும். சராசரியாக ஒரு ரயிலில் 500 பேர் பயணிப்பதால் அதனை உடனடியாக நிறுத்த இயலாது. ஏனென்றால் ரயிலை உடனடியாக நிறுத்த முயற்சிப்பது 500 பேர் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும். இதனால் விலங்கை பார்த்ததும் ரயில் இன்ஜின் ஓட்டுநர் தொடர்ச்சியாக ஹாரனை ஒலித்துக் கொண்டிருப்பார். எமர்ஜென்சி பிரேக் பயன்படுத்திய போதிலும் 500 அல்லது 600 மீட்டர் தொலைவிற்கு அப்பால் ரயில் நிற்பதால் விலங்குகள் அடிபட்டு இறக்கின்றன.

Categories

Tech |