ரயிலில் பயணம் செய்யும்போது இதர பயணிகளுக்கு தொல்லை தரும் வகையில் ரயிலுக்குள் சத்தமாக பாட்டு கேட்பதோ, செல்போனில் சத்தமாக பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பயணியும் தமக்கு அசவுகரியம் ஏற்பட்டதாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குழுவாக செல்பவர்கள் சத்தமாக பேசுவதோ இரவு 10 மணிக்கு மேல் விளக்குகள் எரிய விடுவதோ கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆர் பி எஃப் டிடிஆர் மற்றும் கோச் உதவியாளர், கேட்டரிங் பணியாளர்கள் இதை கண்காணிப்பாளர்கள் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Categories