இந்தியாவில் பொது போக்குவரத்தில் சாதாரண மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது ரயில் போக்குவரத்து தான். இந்நிலையில் இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களின் இருப்பிடம், அலுவலகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்ற சூழலில் கொரோனா கால கட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தியது. அந்த வகையில் முதலில் முன்பதிவில்லா சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டு, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து கொண்டே வருவதால் ரயில்வே வாரியம் பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது நீண்ட நேரமாக இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் போது பயணிகளுக்கு ஏராளமான இடையூறுகள் ஏற்படுவதால், பயணிகள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாகவும் புகார்கள் தெரிவித்துள்ளனர். அதனால் இதனை தடுக்கும் வகையில் ரயில்வே வாரியம் சில புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
இதையடுத்து தற்போது இந்த புதிய விதிமுறைகளில், முதலாவதாக ரயில்களில் இரவு நேரங்களில் பயணிகள் நிம்மதியாக தூங்குவதற்கு சத்தமாக பேசக்கூடாது மற்றும் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 10 மணிக்கு பின், பயணிகள் லைட் ஆஃப் செய்ய வேண்டும். இதனை மீறி செயல்படுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . இவ்வாறு இந்தியன் ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு பயணிகள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக புகார் கொடுத்தாலும், ரயில்வே போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.