Categories
மாநில செய்திகள்

ரயிலில் இருந்து சிலிப் ஆன கல்லூரி மாணவன்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…..!!!!

சென்னை பெரம்பூர் வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று முன்தினம் இரவு எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து வாலிபர் ஒருவர் தவறி விழுந்து இறந்து கிடப்பதாக பெரம்பூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்தவர் அரக்கோணத்தை சேர்ந்த சேகர் என்பவருடை ய மகன் கார்த்திக் (19) என்பது தெரியவந்தது. அம்பத்தூரிலுள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் 2ஆம் ஆண்டு படித்து வந்த கார்த்திக், சென்னை சென்டிரலிலிருந்து அரக்கோணம் புகும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளார்.

அப்போது கார்த்திக் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. எனினும் கார்த்திக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா..? அல்லது செல்போன் கொள்ளையர்கள் யாராவது, அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டனரா..? என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதேபோன்று நேற்று அதிகாலை 3 மணியளவில் பேசின்பாலம்-வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையில்  தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது மின்சார ரயில் மோதி வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவல் கிடைத்தது.

அதன்பின் பெரம்பூர் ரயில்வே காவல்துறையினர் பலியானவரின் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பலியானவர் வண்டலூரை சேர்ந்த ரகுபதி என்பவரது மகன் ஹரிஷ் பாரதி (20) என்பதும், ஓட்டேரியிலுள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. இருப்பினும் அவர் எதற்காக அதிகாலை நேரத்தில் சென்னை வந்தார்..? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |